கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - பொதுமக்கள் வேதனை

பழமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
x
பழமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் உள்ள கதலி நரசிங்கப் பெருமாள் கோவிலில் சுயம்புவாக லிங்கமும்,  பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கின்றனர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு 2002 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொல்லியல் துறை அனுமதி அளித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்