தாய், மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : கொன்றது எப்படி? - அதிர வைக்கும் வாக்குமூலம்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 09:07 AM
திருத்தணி அருகே தாய் மற்றும் மகனை கொன்று நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் சிக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் வன பெருமாள். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மனைவி விஜி மற்றும், மகன் போத்திராஜ் ஆகியோர்  கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம், கொள்ளையடிக்கப்பட்டிருந்த‌து. இதுகுறித்து வனபெருமாள் திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கட் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருவரையும் கொன்றது ஏன், எப்படி என்பது குறித்து வெங்கட் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, முகமூடியுடன் கொள்ளையடிக்க சென்றபோது, விஜி பார்த்துவிட்டதால், அவரை இரும்பு கம்பியால் பலமாக தாக்கி கொன்ற வெங்கட், அவரது பத்து வயது மகனையும் ஒயரால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். கொள்ளையடித்த நகைகள் குறித்து வெங்கட் அளித்த தகவலின்பேரில் போலீசார், 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக பக்கத்துவீட்டுக்கார‌ர் சிக்கியுள்ளது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

81 views

பிற செய்திகள்

+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

20 views

"நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கலவரத்துக்கு காரணம்" - திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

144 views

மஞ்சள் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

28 views

களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

15 views

அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

8 views

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சித்திரை தேரோட்டத் திருவிழா

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.