"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
x
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், திமுகவின் கூட்டணியிலே ஒற்றுமை இல்லாத‌போது, அந்த கூட்டணியால் எப்படி மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கூட்டணியாக சேர்ந்து வாக்கு கேட்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர், கேரளாவில் எதிர் எதிராக நின்று மோதுவதாகவும் விமர்சித்தார். இதனால், காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின், எப்போதும் தன்னை பற்றியே பேசி வருவதாகவும் ஸ்டாலினை பார்க்க பாவமாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்