எந்த சூழ்நிலையிலும் புதுச்சேரிக்கு ஆதரவாக இருப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
x
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்​டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அகல வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் என தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் நிலை குறித்து, தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்

Next Story

மேலும் செய்திகள்