ஜெயலலிதா மரணம் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் அப்பலோ நிர்வாகம் மேல்முறையீடு...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
x
ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவக்குழு அமைக்க வேண்டும். அதுவரை ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க  ஆணையத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பலோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பலோ மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பலோ, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, வரும் 25ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆணையத்தில் தெரிவிக்க  வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அன்றைய தினம் மருத்துவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்