விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - பழனிசாமி

காவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
x
காவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். பெரம்பலூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முசிறி கைகாட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.கவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால், நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்  அதேபோல், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம் எனவும் முதலமைச்சர் பிரசாரம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்