"பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறமுடியாத கட்சி திமுக" - பிரேமலதா விஜயகாந்த்

பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியாத கட்சி திமுக என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
x
பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியாத கட்சி திமுக என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, திருவெறும்பூர் பிரசாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார். நலிவடைந்துள்ள 'பெல்' நிறுவனத்தை மீட்டு, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார் என்றும், அப்போது, தேமுதிக இளங்கோவனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் பிரேமலதா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்