முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பள்ளி...

'கஜா' புயலால் சீர்குலைந்த பள்ளி ஒன்று, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள  அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளியின் நிலைமையை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர் . தங்களுக்குள்ளே பணம் வசூல் செய்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் , பொதுமக்கள் பங்களிப்புடன், பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி  உள்ளனர். பள்ளியில் வகுப்பறைகள் அலுவலக கட்டிடம், சமையலறை, கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்வதோடு, விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்