18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
x
18 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த‌ நிலையில், 305 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. அதிலும், 36 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது மொத்தமாக 269 வேட்பாளர்கள் கொண்ட இறுதி பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 187 வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 

அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். குறைந்தபட்சமாக குடியாத்தம் தனி தொகுதியில் 7 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 
பூந்தமல்லி, தஞ்சாவூர், பெரியகுளம், மானாமதுரை, பரமக்குடி ஆகிய தொகுதிகளில் தலா 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதே போல திருப்போரூர், பாப்பிரெட்டிபெட்டி தொகுதிகளில் தலா 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

ஒசூர் மற்றும் அரூர் தொகுதிகளில் தலா 9 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சோளிங்கர் தொகுதியில் 12 வேட்பாளர்களும், ஆம்பூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும், நிலக்கோட்டையில் 20 வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். திருவாரில் 15 வேட்பாளர்களும், ஆண்டிப்பட்டியில் 16 வேட்பாளர்களும், சாத்தூரில் 30 வேட்பாளர்களும், விளாத்திக்குளத்தில் 14 வேட்பாளர்களும் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்