மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பதினோராம் வகுப்பு மாணவியை, பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் தான் இந்த கோர சம்பவம் நடந்திருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த நிதின்  மற்றும் சாலமன் 11ஆம் வகுப்பு மாணவியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மாணவி கடத்தல் தொடர்பாக புகார் கிடைத்த உடன், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  மாணவி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டனர். என்ன நடந்தது என்பதை மாணவியிடம் வாக்குமூலமாக போலீசார் பெற்றனர். நிதின் மற்றும் சாலமன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்ததாக, மாணவி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை திடுக்கிட வைத்தது. இதையடுத்து நிதின் மற்றும் சாலமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி கடத்தப்பட்டு, ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கல்குறிச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்