கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்

கோடநாடு கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக, தெஹல்கா, மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்
x
கோடநாடு கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்து 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. ஆனால் இந்த நோட்டீஸை, சயான் மட்டுமே பெற்றுக்கொண்டதாகவும், மற்ற நபர்கள் வாங்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல் நண்பரான ஷிவானி அந்த நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டதாகவும், மற்ற 5 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டதாக முதல்வர் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மேத்யூ சாமுவேல், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 6 பேருக்காக தினசரி செய்தித்தாளில், விளம்பரம் வெளியிட உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை முதல்வர் பழனிசாமி குறித்து பேசுவதற்கு 7 பேருக்கும்  விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்