பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
x
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறை செய்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் லாரியின் மீது பேனர்கள் வைத்து கட்டியபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில் பேசிய கனிமொழி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றார். மேலும், இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த  பெண்ணின் தைரியத்தை பாராட்டுவதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியாகும் அளவிற்கு காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். 

இதனிடையே, தடையை மீறி போராட்டம் நடத்திய கனிமொழியை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து  கொண்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்