இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்

இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
x
காவல் துறையை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவரே அந்த மாநிலத்தின் முழு அதிகாரம் கொண்ட அதிகாரியாக கருதப்படுவார். மற்ற துறைகளில் டிஜிபியாக இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபியை விட மூத்த அதிகாரியாக இருந்தாலும், அலுவலக ரீதியாக முன்னுரிமை கொடுப்பது சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு மட்டுமே. தற்போது முதல்முறையாக தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்த்தில் 15 பேர் இடம்பிடித்துள்ளனர். 

1. அந்த வகையில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் உள்ளார். 
2. போக்குவரத்து கழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஜிபியாக ஜாங்கிட், 3.  காவலர் தேர்வு வாரிய டிஜிபியாக திரிபாதி 
4. சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் 
5. தீயணைப்பு துறை டிஜிபியாக காந்திராஜன் 
6. மனித உரிமை ஆணைய டிஜிபியாக ஸ்ரீலட்சுமி பிரசாத் 
7.அயல்நாட்டு பணி டிஜிபியாக மித்திலேஷ்குமார் ஆகியோரும்  
உள்ளனர்.
8. தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக தமிழ்ச்செல்வன்,
9. காவல் செயல் பணி பிரிவு டிஜிபியாக ஆசிஸ் பெங்கரா, 
10.சிறைத்துறை டிஜிபியாக அசுதோஸ் சுக்லா 
11. ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி சைலேந்திரபாபு 
12. சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவு டிஜிபியாக 
கரன்சின்கா 
13. குடியுரிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை டிஜிபியாக பிரதீப் பிலிப், 
14. சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக விஜயகுமார்,  
15. காவல்துறை பயிற்சி பிரிவு டிஜிபியாக குடவாலா ஆகியோர் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்