சொத்துக்காக குழந்தைகளை துன்புறுத்திய பெரியப்பாக்கள் : 1890 சட்டப்பிரிவை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மைனர் குழந்தைகளின் சொத்துகளை உறவினர்களிடம் இருந்து பாதுகாக்க 1890 சட்டப் பிரிவை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்தியுள்ளார்.
சொத்துக்காக குழந்தைகளை துன்புறுத்திய பெரியப்பாக்கள் : 1890 சட்டப்பிரிவை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்
x
செங்கம் அடுத்த குப்பநத்தம் சத்தியா நகர் பகுதியை சேர்ந்த ராஜா - மஞ்சுளா தம்பதியர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, அவர்களது 3 குழந்தைகளையும் பாட்டி நீலம்மாள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் குடும்ப சொத்தான 2 ஏக்கர் நிலத்தை குழந்தைகளின் 2 பெரியப்பாக்கள், அபகரிக்கும் முயற்சியில் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சொத்துக்காக குழந்தைகளை உறவினர்கள் ஏமாற்றிவிடாமல் தடுக்கும் நோக்கில் 1890 சட்டப்பிரிவை செயல்படுத்தினார். அதன்படி பாதுகாவலர் நியமிக்கப்பட்டு குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி ஆன பின்பு, சொத்தினை மூன்றாக பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு பதிவு செய்யப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு ஆதரவு இல்லாத நிலையில் 3 குழந்தைகளையும் அரசு காப்பகத்தில் சேர்க்கவும், படிப்பினை தொடர வசதியையும் ஆட்சியர் ஏற்படுத்தி கொடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்