மார்ச் 13-ல் கன்னியாகுமரியில் பிரசார கூட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு

கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
மார்ச் 13-ல் கன்னியாகுமரியில் பிரசார கூட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு
x
கன்னியாகுமரியில் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில், பிரசாரத்திற்கான ஏற்பாடுகள், குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு  முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, கே.எஸ். அழகிரி, பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்