அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதி கட்சி : ஒரு தொகுதி ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
x
அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும், புதிய நீதி கட்சி சார்பில் அதன்  தலைவர் ஏசி சண்முகமும் கையெழுத்திட்டனர். அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய நீதிகட்சி ஆதரவு அளிக்கும் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்