பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சகட்டமாக ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை
x
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு புறப்படுகிறார். மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்