நிர்மலாதேவி விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை

மாணவிகளை தவறான பாதைக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்த வழக்கு குறித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்மலாதேவி விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை
x
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொது செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஏன் இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர். ஜாமீனில் விடுவதில் அரசுக்கு என்ன அச்சம் என்றும் நிர்மலா தேவி என்ன சூப்பர் குற்றவாளியா..? என்றும் நீதிபதிகள் வினவியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான, ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கபடுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு குறித்து சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலா தேவி, முருகன், கருப்புசாமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட  நீதிபதிகள் வழக்கு விசாரணையை, மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்