அலுவலகத்தில் இல்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் : நெல்லை ஆட்சியரின் அதிரடி ஆடியோ

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
x
நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இதற்காக பயனாளிகளுக்கு விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், பணி நேரத்தில் இல்லாத‌தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் விண்ணப்பத்தோடு, புகார் மனுக்களையும் அளித்து விட்டு செல்கின்றனர். இதனால், ஆட்சியர் ஷில்பா, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இந்த எச்சரிக்கை ஆடியோவை அனுப்பியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்