ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
x
* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், சிவகளை, பரம்பு பகுதிகளில் அகழாய்வு நடத்தவும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

* இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து  16 ஆண்டுகள் முடிந்தும், நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை என தெரிவித்தனர்.

* மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும், மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் நீதிபதிகள் கூறினர்.

* அப்போது அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை என்றும், மத்திய தொல்லியல்துறையின்  தமிழக  உயரதிகாரி விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக சொல்வதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்