பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x
ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தமிழகத்தில் தடை  விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக, சட்ட முன் வடிவு,  சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்து அளித்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை குற்றம் செய்தால் 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் முறை குற்றம் செய்தால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும்  வகை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்