"ஆலையால் பாதிப்பில்லை - ஸ்டெர்லைட் வாதம்"

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் வாதத்தை முன்வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலை ஒரு சதவீத சல்பர் டை ஆக்சைடை மட்டுமே வெளியிடுவதாகவும், எனவே சுற்றுசூழலை பாதிப்படைய வைக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும் ஆலை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமோ, அறிக்கையோ இல்லை எனவும் அவர் வாதிட்டார்.

ஆலையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தருண் அகர்வால் குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையை அடிப்படையாக கொண்டே, ஆலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். இதையடுத்து வழக்கு வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்