உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு

சென்னையில், உலக வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு
x
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் வசித்து வரும் சுனில்குமார், உலக வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளையக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து மோப்ப நாய்கள் உடன் வந்த போலீசார், தடயங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்