குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்

குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.
குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
x
குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது. நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை அளித்ததாக  தலைமை  செயலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அளித்த பதிலில், வருமான வரித்துறை  கடிதம் அனுப்பிய போது தற்போதைய தலைமை செயலர் பொறுப்பில் இல்லை என்றும், அவர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த போது, குட்கா புகார் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்