நடிகை பானுப்ரியா மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம்

நடிகை பானுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது.
நடிகை பானுப்ரியா மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம்
x
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், தன் 14 வயது மகளை பானுப்ரியாவின் வீட்டில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அங்கு தன் மகளை பானுப்ரியா சித்ரவதை செய்வதாகவும், பாலியல் தொல்லை அளிப்பதாகவும் சமல்கோட்டா பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பானுப்ரியாவின் வீட்டில் இருந்த சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே சிறுமியை வேலைக்கு வைத்திருந்த விவகாரத்தில், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிகை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்