"தொழில் தொடங்க ஏற்ற வரிசையில் தமிழகம் 2-ம் இடம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 2-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கண்ணாடி உற்பத்தி ஆலையின் 3-வது யூனிட்டை முதலமைச்சர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க ஏதுவான கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொழில் தொடங்க சாதகமான மாநிலங்கள் பட்டியலில், 6-ம் இடத்தில் இருந்து 2ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளதாக முதலமைச்சர்
பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்