ஸ்டாலின், கனிமொழி சந்தேகத்தை போக்குவது ஆணையத்தின் கடமை - ராஜா செந்தூர்பாண்டியன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
x
துணை முதல்வர்  பன்னீர்செல்வத்தை ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு, ஆறுமுகசாமி  ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், துணை முதல்வர் தரப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து, பிப்ரவரி 5ம் தேதி அவர் ஆஜராவார் என ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,  கொடநாடு சம்பவத்தையும், ஜெயலலிதா மரணத்தையும் தொடர்புபடுத்தி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரின் சந்தேகங்களை போக்குவது ஆணையத்தின் கடமை என்றும், அதிமுக அமைச்சர்களை விசாரிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்