தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்

70வது குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நெல்லையில் குடியரசு தின விழாவை ஒட்டி, போலிசாரின் கண்கவர் அணி வகுப்பு நடந்தது. புதுக்கோட்டையில் காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. வேலூரில் தேசிய கொடியை ஏற்றி வைத்த, மாவட்ட ஆட்சியர் ராமன்  ,  4 கோடியே 24 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்