"ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை" - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2-வது முறையாக மறுப்பு

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பிக்க, இரண்டாவது முறையாக, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
x
இருபதுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளோடு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, ஆலையை திறக்க அனுமதிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை நிராகரித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஜனவரி 1ஆம் தேதி இதற்கான கடிதத்தை அனுப்பியது. இதனிடையே, ஆலை திறப்பதற்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், ஜனவரி 10ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது அதில், ஆலை செயல்படுவதற்கான அனுமதியை புதுப்பிக்க வேண்டுமானால் பசுமைத் தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்