18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதி காலியாக உள்ளதால் உடனே இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை  நடத்த ஏப்ரல் 24ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் அதற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்