மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்

மாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்
x
மாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி  கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் தடையால் நடப்பாண்டு தேவை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. நெட்டி மாலை தயாரிப்புக்கு புகழ் பெற்ற கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒரு நெட்டி மாலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அழிந்துவரும் நெட்டி எனும் தாவர வகைகளை அனைத்து பகுதி குளத்திலும் அதிக அளவில் வளர்க்க  அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று நெட்டி மாலை தயாரிப்பு தொழிலாளர்கள் கோரியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்