அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுவிற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்
x
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவிற்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நடராஜன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 760 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ஒரு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் குழவும், 15 மருத்துவர்கள் குழுவும், பத்து 108 ஆம்புலன்சும், ஐந்து கால்நடை ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இருக்கும் என்று கூறினார். அடுத்ததாக பேசிய ஒருங்கிணைப்பு குழ தலைவரும் முன்னாள் நீதிபதியுமான ராகவன், நீதித்துறை, காவல் துறை, ஆட்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்துவோம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்