எருதை மறித்து பாரம்பரிய தேவராட்டம் : கடுங்குளிர் இரவை அதிர வைக்கும் உருமி இசை

பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில், உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களில், எருதை மறித்து, பாரம்பரிய தேவராட்டம் ஆடி பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
எருதை மறித்து பாரம்பரிய தேவராட்டம் : கடுங்குளிர் இரவை அதிர வைக்கும் உருமி இசை
x
உடுமலையை அடுத்த அம்மாபட்டி, பெரியகோட்டை, ராஜாவூர், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை காக்கும் வகையில், உருமி இசையோடு, ஊருக்கு பொதுவாக உள்ள காளை மாட்டுடன் விளையாடும், எருது மறித்தல் விளையாட்டில் இளைஞர்கள் பங்கேற்றனர். இரு குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்கு ஏற்ப, சலங்கை கட்டிக்கொண்டு, காளையும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனமாடுகின்றனர். மெதுவாக துவங்கும், இசையும், நடனமும், படிப்படியாக வேகமெடுத்து, இறுதியில் சாமியாட்டத்துடன் நிறைவடைகிறது. கடும் குளிர் இரவும் அதிரும் வகையில், இசையும், ஆட்டமும் என உடுமலை கிராமங்கள் களைகட்டுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்