ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபாடு
பதிவு : ஜனவரி 09, 2019, 09:54 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரையில் காளைகளை வளர்ப்பதிலும், அதனை போட்டிக்கு தயார் செய்வதிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அலங்காநல்லூர் அருகே உள்ள பொந்துகம்பட்டி மக்கள், உயிரிழந்த காளையை தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த கிராமத்தில் பொதுமக்களால் வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்று ஊரின் பெருமையை நிலைநாட்டியது. ஆனால் கடந்த 1994ல் வயது முதிர்வு காரணமாக காளை உயிரிழந்ததையடுத்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

பிரியமாக வளர்க்கப்பட்ட காளையை தெய்வமாக வழிபட வேண்டும் என விரும்பிய மக்கள், ஊரின் நடுவே அதனை அடக்கம் செய்து அதன் மேல் காளை மாட்டின் சிலையை நிறுவினர். தற்போது அதற்கு மணிமண்டபம் கட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

இறந்த காளையின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே1 ம் தேதி கிராம மக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.காளையின் மீது கொண்ட பிரியத்தால்  அதை தெய்வமாகவே கருதி வழிபடும் இந்த ஊர் மக்களின் பாசம் இங்கே வருபவர்களை நெகழச் செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3441 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2976 views

பிற செய்திகள்

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.

44 views

"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

26 views

முதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

16 views

போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு

38 views

"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

11 views

நியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.