ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை

ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.
x
சேலம் மாவட்டம்  ஒமலுர் அருகே  கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வடமனேரி . 436 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இந்த ஏரியில் ஏராளமான கருவேலமரங்கள் காடு போல வளர்ந்து ஏரி நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விடுமுறை நாட்களில் ஜேசிபி மூலம் கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர். 

இதனால் மிகப்பெரிய அந்த ஏரி தண்ணீரை தேக்க தயார் நிலையில் உள்ளது.  நீர் அருந்த அங்கு பறவைகள் வருவதால் அந்த ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கருவேல மரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்திய இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்