ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
x
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்