டெல்டா இயல்பு நிலைக்குப் பின்னர் குரூப் - 2 தேர்வு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிப்ரவரி மாதம் நடக்க உள்ள குரூப்-2 முதன்மைத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை, பிப்ரவரி மாத இறுதியில் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் டெல்டா மாவட்ட மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே அறிவித்திருந்தவாறு மே மாதத்தில் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

