நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைபட்டா - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

5 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாசவநத்தம், குராயூர், சென்னம்பட்டி, மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரிசு வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்