முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.  ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த கூட்டத்தில், பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, தமிழகத்தில் 16 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனங்கள் தொடங்கப்படும் என்பதும் இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல, மேகதாது அணை தொடர்பாகவும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்