ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களில் 12 பேரின் தலை, மார்பில் குண்டு பாய்ந்திருப்பது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
x
தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மே 28 ஆம் தேதி ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.

இந்நிலையில், உயிரிழந்த 13 பேரில் 12 பேரின்  தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்து இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று S.L.R ரக துப்பாக்கிகளில் இருந்து மட்டும் 30 தோட்டாக்களும், 303 ரக துப்பாக்கியில் இருந்து 4 ரவுண்டும், 410 ரக துப்பாக்கியில் இருந்து 12 முறையும் சுடப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்