என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
x
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது  திறந்த வெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நெய்வேலி அருகே உள்ள சுற்று வட்டார கிராமங்களில் 4 ஆயிரத்து 841 புள்ளி 99 ஹெக்டேர் நிலத்தை  2 ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் போது பல்வேறு பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாந்துவதாகவும், இனிமேல் தொடர்ந்து ஏமாற போவதில் என்று கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.  10க்கும் மேற்பட்ட கிராமங்களில்  கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் மக்கள், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாகவும்  நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும் தெரிரிவத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்