நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.
x
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் யுக்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் மசூசூதனன், தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்