உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2  மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் உயர்கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்படும்  பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழக அரசு கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய சமூக நீதித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  தமிழக அரசுக்கு  2016-17 வரை 822 கோடி ரூபாய்  மட்டுமே பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டத்திற்காக 4 ஆயிரம்  கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நிலுவை தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தொகையை விடுவிக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சகத்துக்கு அறிவுறுத்திய  நீதிபதிகள், அதில் 2017-18ஆம் ஆண்டு வரையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய  நிலுவைத்தொகை 984 கோடியே 91 லட்சம் ரூபாயை இரண்டு மாத்தில் வழங்க வேண்டும் என  மத்திய சமூக நீதித்துறைக்கு உத்தரவிட்டனர். 2017 - 18ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகையான 162 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கவும்  தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்