ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்

ஜனவரி மாதம் முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் வேலை செய்யாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல் அனுப்பியுள்ளன
ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்
x
* ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் பண மோசடிகளை தடுக்கும் விதமாக, புதிய தொழில்நுட்பத்துடன் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. 

* சிப் இல்லாத பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் 'சிப்' பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. 

இந்தநிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பழைய ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யாது என்ற தகவல் வேகமாக பரவ அதனை வங்கி அதிகாரிகள் மறுத்திருந்தனர். 

* ஆனால் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவருகிறது. அதில், 'சிப் பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டை வங்கியில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பழைய கார்டுகள் வேலை செய்யாத் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இதையடுத்து ஜனவரி ஒன்று முதல் சிப் இல்லாத ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யாது என்பது உறுதியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்