சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது...

சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளரை போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்துள்ளனர்.
x
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர், மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு, அவர் குடியிருக்கும் வில்லிவாக்கம்  பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமி கதறி அழுத சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும், வாசு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியிடம் நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தப்பியோடிய காவல் உதவி ஆய்வாளரை துரத்தி பிடித்து அடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இது குறித்து, காவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு தகவல் சென்றதும் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 மாதமாக காவல் உதவி ஆய்வாளர் வாசு, பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் வாசுவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்