கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது.
x
கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில், கஜா புயலின் தாக்கத்தால் 300க்கும் அதிகமான குடிசை வீடுகள் நிலை குலைந்தன. விழுந்த மரங்களையும், பறந்த குடிசைகளையும்  மெதுவாக மக்கள் சரிசெய்து கொண்டிருக்க, நேற்று இரவு முதல் அங்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், மக்கள் பலர் உட்கார கூட இடமின்றி தவித்து வருகின்றனர். மூதாட்டி ஒருவரின் குமுறல் மூலம் அங்கிருக்கும் மக்களின் வலியை உணர முடிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்