வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு : "சென்னை மாநகராட்சி தூங்குகிறதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு விவகாரத்தில், மாநகராட்சி தூங்குகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
x
வடபழனியில் கடந்தாண்டு நடந்த அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன், அறிக்கை தாக்கல் செய்தார். அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை எனக் குறிப்பிட்டனர். 

மாநகராட்சியின் செயல்பாடு தூங்குவது போல் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை குப்பை மேடாக காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்தனர். தமிழக அரசையும், மாநகராட்சியையும் நீதிமன்றம் நடத்த முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், தீ விபத்தில் இறந்தவர்களுக்கான இழப்பீடு, அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆதாரங்களுடன் அடங்கிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்