காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் குறைப்பா? - தந்தி டிவிக்கு கிடைத்த நீர்வள ஆணையத்தின் கடித நகல்

மேகதாது அணை திட்டம், நீர்மின் உற்பத்தி திட்டம் என்பதால், அதன் கட்டுமான வடிவமைப்புக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
மேகதாது அணை திட்டம், நீர்மின் உற்பத்தி திட்டம் என்பதால், அதன் கட்டுமான வடிவமைப்புக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, தந்தி டிவிக்கு  நீர்வள ஆணையத்தின் கடித நகல்  கிடைத்துள்ளது. 

மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக  ஆய்வு நடத்த அனுமதி கோரி கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் மேகதாது அணைத்திட்டம்  நீர்பாசன திட்டம் அல்ல என்றும்,  நீர்மின் உற்பத்தி திட்டம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் காவிரி மேலாண்மை ஆணைய செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் தந்தி டிவிக்கு கிடைத்துள்ளது. 

அதில், மேகதாது அணைத்திட்டம்  நீர்பாசன திட்டம் இல்லை என்பதால்  , நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கு காவிரி மேலாண்மை வாரியமும் , மத்திய நீர் ஆணையமும் கலந்தாலோசித்து புதிய அணை கட்டுமான வடிவமைப்புக்கு ஒப்புதல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்று பகுதியில் எந்த புதிய திட்டமாக இருந்தாலும், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற நிலை இருந்து வரும் நிலையில், அணை கட்டுமான வடிவமைப்புக்கு மட்டுமே அனுமதி அளிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 
உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுபோன்ற சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் எதிர்ப்பை தெரிவிக்கவும், வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது காவிரி மேலாண்மை ஆணைத்துக்கே அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதால், புதிய அணை திட்டங்களை தடுக்க தமிழகத்துக்கு வழியில்லாமல் போய்விட்டதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேகதாது அணை திட்டம் தொடர்பான ஆய்வு நடத்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்து  தடைபெறவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுபோல் எதிர்காலத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்க கூடாது என்ற உத்தரவையும் நீதிமன்றம் வாயிலாக தமிழக அரசு பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்