இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு

கஜா புயல் காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையைத்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தி இருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
x
* கஜா புயல் காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையைத்தான்,  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தி இருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

* புயல் காரணமாக 20  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்தால் பரிசீலனை செய்வோம் என, தந்தி தொலைக்காட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  பேட்டி அளித்த நிலையில்,  "தமிழக அரசின் கருத்தைத்தான் அவர் பிரதிபலித்திருக்கிறார்'  என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

* இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தந்தி தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் , "புயல் காரணமாக 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்தால், அது குறித்து பரிசீலிப்போம்" என தெரிவித்திருந்தார்.

* இந்த பேட்டி குறித்து, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இன்று காலை  கேட்டபோது,  "தமிழக அரசின் கருத்தைத்தான்  தலைமை தேர்தல் ஆணையர் பிரதிபலித்திருக்கிறார்" என்று பதிலளித்தார். இதன்மூலம் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இருப்பதும்,  இது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பும் திட்டமும் வெளியாகியுள்ளது.


அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை * தமிழக அரசு உறுதியாக இருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது வெளியாகி உள்ள தகவல் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து தமிழக முதலமைச்சர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விவகாரத்தை பொறுத்தவரை புயல் காரணமாக தள்ளி வைக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவை எடுப்பார் என்றாலும் தமிழக அரசின் கருத்தை தான் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி வெளிப்படுத்தியிருக்கிறார்

* புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , திரை துறை சார்பில் மிகப்பெரிய அளவிற்கு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது இதை நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததில் தெரிந்து கொண்டுள்ளோம். முதலமைச்சர், நாளை தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்.




Next Story

மேலும் செய்திகள்