முறிந்த மரத்தில் வாழ்விடம் தேடும் கிளிகள் - உருக வைக்கும் பறவைகளின் பரிதவிப்பு...

பட்டுக்கோட்டை அருகே கஜா புயலில் முறிந்து விழுந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்து, கிளி உள்ளிட்ட பறவைகள் வாழ்விடத்தை தேடும் காட்சி, பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
கடற்கரையோர மக்களை கதிகலங்க வைத்த கஜா புயலின் கோரதாண்டவம் பறவைகள், விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்த மரங்கள், புயலில் நிர்மூலமாகிவிட்டது. அங்கு தங்கியிருந்த பச்சைகிளிகள், முறிந்து கிடக்கும் மரங்களில் வாழ்விடத்தை தேடுகின்றன. வெட்டவெளியான வாழ்விடத்தை  விட்டு செல்ல மனமில்லாத கிளிகள், அதிலிருந்த குப்பைகளை தங்களது அலகுகளால் கொத்தி, கொத்தி சுத்தம் செய்கின்றன. பிற பறவைகள் கூட்டை தேடி அங்கும், இங்கும் சுற்றி  பறந்து வரும் காட்சிகள் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்